--- --:--:-- --

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம் தமிழகம் வருகிறது..!

4

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் அடுத்த மாதம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

 

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலத்தில் விட வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கில் கடந்த மாதம் நீதிபதி மோகன் முன்பு விசாரணைக்கு வந்த பொழுது ஜெயலலிதாவின் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு தொடர்பாக ஐந்து கோடி ரூபாய் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

 

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது 28 கிலோ தங்க நகைகள் உட்பட ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த பொருட்களை பெற்றுக்கொள்ள தமிழக அரசு உள்துறை உதவி செயலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon