ஜெயலலிதா, இபிஎஸ் புகைப்படங்கள் உள்ள புத்தகங்களை விநியோகிக்க வேண்டும்..!
அதிமுக ஆட்சியின் போது அச்சிடப்பட்ட ஜெயலலிதா இபிஎஸ் புகைப்படங்கள் உள்ள புத்தகங்களை தற்போது வினியோகிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது அச்சிடப்பட்ட ஜெயலலிதா இபிஎஸ் புகைப்படங்கள் உள்ள புத்தகங்களை தற்போதும் வினியோகிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் பாடப்புத்தகம் எழுதுபொருள் புத்தகப் பை சைக்கிள் ஆகியவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதால் அவற்றை கிடப்பில் போடாமல் மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்க கோரி நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தனது விண்ணப்பத்தில் அரசுகளுக்கு இடையேயான ஈகோவினால் பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணடிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். எனவே ஏற்கனவே அச்சிடப்பட்ட புத்தகத்தை தேக்கி வைக்காமல் மாணவர்களுக்குப் புரிய வைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தகங்களை அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விண்ணப்பதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.






