கொரொனா மூன்றாம் அலையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்..!
கொரொனா மூன்றாம் அலையை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே பாதிப்பு விழுக்காடு அதிகரிக்கிறது என மாநில முதல்வர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வோரும், முகக் கவசங்கள் அணியாமலும் சந்தைகளில் அதிக அளவில் ஒரே நேரத்தில் கூட்டமாக கூடுவது சரியல்ல என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கூறிய மோடி தடுப்பு ஊசி செலுத்தப்படும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டு மக்கள் மூன்றாம் அலை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.






