--- --:--:-- --

மீண்டும் தாக்குதலை தொடரப் போகிறதா வெட்டுக்கிளி..!

9

ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் வட மாநிலங்களில் பரவலாக வெட்டுக்கிளிகள் ஊடுருவி இருக்கின்றன.

 

அந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹஸ்டெடா கிராமத்தில் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. நான்காவது முறையாக படையெடுத்த வெட்டுக்கிளிகள் கண்ணில் தென்படும் பயிர்கள் அனைத்தையும் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

வெட்டுக்கிளிகளால் ஏற்படும் சேதத்திற்கு ராஜஸ்தான் மாநில அரசு தங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon