தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3713 பேருக்கு உறுதி மொத்த உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டி 1025 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3509 ஆக இருந்த பாதிப்பு நேற்று 3645 ஆக உயர்ந்தது. ஆனால் இன்று அதையும் தாண்டி 3713 ஆக பதிவாகியுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 1929 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 248, மதுரையில் 218 என பதிவாகியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இன்று பரவலாக தொற்று பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றவர்களில் இன்று மட்டும் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2737 ஆகும்.
இன்று ஒரு நாளில் மட்டும் உயிரிழப்பு 68 ஆகும்.இதுதமிழ்நாட்டில் இதுவரை ஒரு நாளில் பதிவான உயிரிழப்புகளில் அதிகபட்சமாகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கொரோணா உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐக் கடந்து 1025 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் 1.30%ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







