--- --:--:-- --

டிக் டாக் மன அழுத்தத்தை கொடுக்கிறதா?

10

டிக்டாக்கில் பிரபலமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்த செயலியின் மூலமாக கிடைக்கும் புகழ் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வயது வித்தியாசம், வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் ஆட்கொள்கிறது மன அழுத்தம்.

 

நாளாக நாளாக எண்ணங்களின் குவியல் அழுத்தமாக மாறுகிறது. சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது. வளரும் தொழில்நுட்பங்களும் அதற்கான வாசலை திறந்து வைக்கின்றன. அதில் ஒன்றாக டிக் டாக் என்ற செயலி பலரையும் ஆட்கொண்டுள்ளது.டிக் டாக்கில் பலவித வீடியோக்களை பதிவிட்டு பலரும் பிரபலம் அடைந்து வருகின்றனர்.

 

டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமடைந்த பெண் ஒருவருக்கு தேசிய கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறது. அந்த அளவுக்கு அவர்களை உயர்த்துகிறது இந்த டிக் டாக். ஆனால் ஒரு கட்டத்தில் அதிக பார்வையாளர்கள் வேண்டும் வேண்டும் என தூண்டுதலால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

 

வயது வித்தியாசமின்றி தமிழகத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான சூர்யா என்ற பெயரில் இயங்கும் இளம்பெண், ஜி பி முத்து போன்றவர்களும் இருக்கின்றனர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த சூர்யா என்ற இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பக்குவப்படாத மனநிலையில் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பவர்கள் ஏமாற்றம் வந்தால் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போட தெரியாதவர்களே தற்கொலைக்கு தூண்டப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

டிக் டாக்கிற்க்கு அடிமையானவர்களை பிரபலம் அடைவதற்காக டிக்டாக்கில் விபரீதமான வீடியோக்களை வெளியிட துணிபவர்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

Leave a Reply

Right Menu Icon