ஹிஜப் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்..?
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த மூன்று பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர்கள் நீதிமன்றத்திற்கு எதிராக பேசியதாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.





