நாளைக்குள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்..!
சம்பா நெற்பயிரை நாளை திங்கட்கிழமைக்குள் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. உழவர் பெருமக்களுக்கு வேளாண்மை மற்றும் உலக நலத் துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நாளைக்குள் பதிவு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.






