போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!
போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் விழாவையொட்டி சாதனை ஊக்க தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா 625 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
151 நாட்களுக்கு மேல் 200 நாள்களுக்கு உள்ளாக பணிபுரிந்தவர்களுக்கு தலா 195 ரூபாய் ஊக்க தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 17,129 பேருக்கு மொத்தம் ஏழு கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.





