தனது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொண்டுத்த நண்பனுக்கு உடந்தையாக இருந்த கணவன்!
திருச்சியில் நண்பரின் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். கேகே நகரை சேர்ந்த முகமது அஸ்லம் இவருக்கு மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
அவ்வப்போது இவர்களது வீட்டிற்கு செல்லும் கணவன் நண்பரான முகமது பாருக் என்பவர் முகமது அஸ்லமின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவர் முகமது அஸ்லம்உடந்தை என்பதால் தனது மனைவி பலமுறை தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
முகமது பாருக்கின் கவனம் தனது பெண் பிள்ளைகளின் பக்கம் திரும்பியதும் அஸ்லமின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முகமது அஸ்லமையும் அவனது இச்சைக்கு ஐ தனது மனைவியை இரையாக்கிய முகமது பாரூக்கையும் போலீசார் கைது செய்தனர்.






