தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து ரயில்களை விட வேண்டாம்..!
தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஐந்து மாநிலங்களில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
விமானங்களையும், வாரம் ஒரு முறை மட்டுமே அனுமதித்தால் போதும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்களும் புறநகர் மின்சார ரயில்களும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை இயங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






