--- --:--:-- --

இந்தியா – சீனா இடையே இன்று 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தை!

13

லெப்டினன்ட் ஜெனரல் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான இந்தியா-சீனா இடையேயான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கடந்த 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி லடாக் எல்லையில் சீனப் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

அதில் பதற்றம் நிலவும் இடங்களில் இருந்து இரு தரப்பு படைகளையும் திரும்ப பெறுவதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. அதனடிப்படையில் கல்வானிலிருந்து தனது துருப்புகளையும், இராணுவ வாகனங்களையும் சீனா ஓரளவு திரும்பப் பெற்றதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கட்டுப்பாட்டிலுள்ள இந்தியப் பகுதியான சூசுலில் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon