--- --:--:-- --

கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தும் கணவன்..!

4

காராஷ்டிராவில் கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தும் கணவனிடமிருந்து தங்கள் மகளை மீட்க கோரி வீடியோ கால் ஆதாரத்துடன் அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

 

புதுக்கோட்டையை சேர்ந்த பவித்ராவும், கணவரும் ஒன்றரை வயது குழந்தையுடன் மகாராஷ்டிராவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பவித்ரா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

 

கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கணவர் மற்றும் அவரது குடும்பமும் சேர்ந்து அடித்து துன்புறுத்துவதாகவும் மொழி தெரியாததால் அந்த மாநிலத்தில் பவித்ராவின் புகார் எடுத்துக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து வீடியோ காலில் தன் மகள் கதறுவதை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து தங்கள் மகளை மீட்குமாறு அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon