கூல்டிரிங்ஷ் வாங்கி குடித்த 3 வயது சிறுமி உயிரிழப்பு..!
சென்னை பெசன்ட் நகரில் மளிகை கடையில் கூல்டிரிங்ஷ் வாங்கி குடித்த 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். வீடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் பத்து ரூபாய் கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் ரஷ்ணா ஒன்றை வாங்கி குடித்துள்ளார்.
அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாந்தி எடுத்த அவர் மூக்கிலிருந்து சிவப்பு நிறத்தில் சளி வந்துள்ளது. பயந்து போன சிறுமியின் அக்கா உடனடியாக அம்மாவிடம் கூறியுள்ளார்.
தாய் வந்து பார்த்தபொழுது சிறுமி மயங்கி நிலையில் இருந்துள்ளார். 16 வயது சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.






