--- --:--:-- --

மருத்துவமனையில் புகுந்த சாரைப்பாம்பு..!

5

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் வட்டாரம் அரசு தலைமை மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மருத்துவமனை காம்புபவுண்ட் பகுதியில் புதர்மண்டி உள்ளது. காலை வழக்கம்போல மருத்துவர்கள் செவிலியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் வஅறையில் சுமார் 9 அடி நீளமுள்ள பாம்பு இருப்பதைக் கண்டு அலறி அடித்து ஓடி வந்தார்.

 

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். அது சாரைப்பாம்பு வகையை சார்ந்தது என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon