--- --:--:-- --

ஆந்திராவில் துவங்கப்பட்டுள்ள 1088 ஆம்புலன்ஸ் சேவை..!

6

ஆந்திராவில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 88 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெகன் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

இதையடுத்து அங்குள்ள பெஞ்சி சந்திப்பில் இருந்து ஆயிரத்து 88 ஆம்புலன்ஸ்களும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன. இதன் மூலம் ஆந்திராவில் அவசரகால உதவி தேவைப்படும் எந்த ஒரு இடத்திற்கும் அதிகபட்சம் இருபது நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும். தொலைதூர கிராமங்களில் தனி மருத்துவக் குழுவுடன் ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல தயாராக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon