--- --:--:-- --

திண்டிவனம் மாணவி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

8

ருத்துவ கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பாமல் படிப்பைத் தேர்வு செய்யவில்லை என கடிதம் அனுப்பப்பட்டதை எதிர்த்து திண்டிவனம் மாணவி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் ரோசனை பகுதியைச் சேர்ந்த சந்திரலேகா நீட்தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி‌இ சிவில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார் சந்திரலேகா.

 

இந்நிலையில் சந்திரலேகா மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்களில் இருந்த போதிலும் அந்த இடங்களை தேர்வு செய்ய விருப்பம் இன்றி கடிதம் வந்துள்ளது.

 

அழைப்பு கடிதம் வராத நிலையில் சந்திரலேகாவை தாயார் மகேஸ்வரி தன் மகனை மருத்துவப் படிப்பில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டார் என்பது குறித்த ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon