போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் – 3 கி.மீ தூரம் ஓடிய முதலமைச்சர் விஜய்
போதைப்பொருளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ’ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற பெயரில் இன்று சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் மாபெரும் மாரத்தானை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். மாரத்தான் ஆரம்பிக்கு முன் முதலமைச்சர் விஜய் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதி மொழி வாசித்தார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற மக்களுடன் மக்களாக முதலமைச்சர் விஜய் மாரத்தானில் பங்கேற்று 3 கி.மீ தூரம் வரை ஓடினார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ராமன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.போதை பொருட்களுக்கு எதிரான மாரத்தானில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் கொடுக்கப்பட்டது.





