--- --:--:-- --

தமிழகத்திலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்களிக்கும் நடைமுறை..!

9

ட்டப் பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்களிக்க நடைமுறை இந்த முறை தமிழகத்தில் அறிமுகம் ஆகிறது. கொரொனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தது. கொரொனா வைரஸ்களை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் அப்போது பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியது.

 

அதில் மிக முக்கியமானது 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் முறையில் தங்களது வாக்குகளை அளிக்கலாம் என்று நடைபெற தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இதன்படி 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் முறையில் தான் வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு சென்ற அவர்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகவே மூத்த அதிகாரி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக செல்வர்.

 

அப்போது அவர்கள் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தால் வாக்காளர்களிடம் தபால் வாக்கு சீட்டைக் கொடுத்து அதில் வாக்கினைப் பெற்று வாங்கி வந்து அதிகாரி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்.

 

ஒரு மூத்த அதிகாரி வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லும்போது அந்த வாக்காளர் வீட்டில் இல்லை என்றால் அடுத்த ஐந்து நாட்களுக்குள் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று தபால் வாக்குகளை சேகரிக்க வேண்டும். இப்படி சேகரிக்கப்படும் தபால் வாக்குகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்த படமாட்டாது.

 

தமிழகத்தை பொருத்தமட்டில் கிட்டத்தட்ட 12.9 8 லட்சம் பேர் தபால் வாக்களிக்க வாய்ப்புள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon