அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் – ஜவாஹிருல்லா
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு பிரிவுகளில் நெரிசல், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் அடிப்படை உபகரணங்களின் குறைபாடு போன்ற பிரச்சினைகள் நீடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுவது அரசின் முன்னுரிமை சரியான திசையில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்க மோதிரம் வழங்கும் திட்டம் சில நாட்களுக்கு மட்டுமே செய்தியாக இருக்கலாம்.
ஆனால் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்தினால் அது பல தலைமுறைகளுக்கு நீடித்த நன்மைகளை வழங்கும் என்றும் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.





