ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கப் டீ..!
கொல்கத்தாவில் உள்ள ஒரு கடையில் ஒரு டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கங்குலி என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு தேனீர் கடை ஒன்றை தொடங்கியுள்ளார். அவரது கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் பத்து ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கின்றன.
இதில் குறிப்பிட்ட தேநீர் மிகவும் பிரபலமானது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையின் மூலம் இந்த தேநீர் தயாரிக்கப் படுகிறது. இந்த தேயிலை 1 லட்சம் ரூபாய் என்பதால் ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.






