--- --:--:-- --

இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

10

ரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுவிடுக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கடலோரப் பகுதிகளில் ஒலிபெருக்கி மற்றும் குறுஞ்செய்தி மூலம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகங்களும் தயார் நிலையில் உள்ளன.

 

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே வீடு, நிவாரண முகாம்களின் தங்க வைக்க ஏற்பாடு நடைபெற்றுள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்தை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon