தேர்தல் நடத்தாமலே பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பதவி…! முன்னாள் அமைச்சரின் நியமனத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!!
திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி நியமனம் செய்யப்பட்டார்.சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் முறைப்படி தேர்தல் நடத்தாமல், விதிமுறை மீறி அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதாகக் கூறி, சங்கத்தின் உறுப்பினரான பச்சமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கினார். தேர்தலே நடத்தாமல், மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவராக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி முறைகேடாக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்றும், அவர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




