வழிபாட்டு உரிமை என்பது சலுகை அல்ல: நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன்
நாம் எங்கே இருந்தோம், எத்தகைய போராட்டத்தின் மூலம் இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை இந்தப் தலைமுறையும் வரும் தலைமுறைகளும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய மகாத்தான நூல். கோயில் நுழைவு என்பது ஒரு எளிய மத விவாதம் அல்ல; சமூக அடிப்படை அமைப்பு, மனித கண்ணியம், அரசியல் அமைப்பு, சட்டத்தின் எல்லைகள் குறித்த ஆழமான சிந்தனைக் களம்.
ஒரு மனிதனைப் பிறப்பின் காரணமாகவோ அடையாளத்தின் காரணமாகவோ இறைவனை வழிபடுவதிலிருந்து தவிர்ப்பது அவனது அடிப்படை கண்ணியத்தைப் பறிப்பது போன்றது. கோயில்கள் அனைத்தும் மக்களுக்காகத் திறக்கப்படுவது. வழிபாட்டு உரிமை என்பது மதச் சலுகை அல்ல; அது குடிமகனின் அடிப்படை உரிமை.
சென்னையில் நடைபெற்ற திமுகவின் மனுராஜ் சண்முகசுந்தரம் எழுதிய ‘மக்களின் சரணாலயம் இந்தியாவில் கோயில்களை ஜனநாயகமயமாக்குவதற்கான 100 ஆண்டுகாலப் போராட்டம்’ நூல் வெளியீட்டு விழாவில் நீதியரசர் ஆனந்த் வெங்கடேசின் பேச்சு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




