--- --:--:-- --

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ்

6

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், “ஏற்றத்தாழ்வுகளை நீட் தேர்வு அதிகரித்துள்ளது. நீட் தேர்வு சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறையால் தனியார் பயிற்சி மையங்களே பலன் பெறுகின்றன.

 

 

கிராமப்புற அரசு பள்ளி மாணவர் விவசாயி பிள்ளைகள் அதே அளவிலான பயிற்சியை பெற முடியுமா?” என்று அருண்ராஜ் கேள்வி எழுப்பினார். சமூக நீதியை பாதிக்கும் சமவாய்ப்பை குறைக்கும் எந்த ஒரு தேர்வையும் ஏற்க முடியாது என்பதே நம் கொள்கை என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார். பேரவையின் ஒருமித்த குரலை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும் மாநில உரிமையை மதிப்பதே கூட்டாட்சி கொள்கை என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

 

 

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட கல்வியை நடைபெறப் படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்று அருண்ராஜ் கூறினார்.

 

மதிப்பெண் அடிப்படையிலான செயற்கையில் சமூகத்தில் பின்தங்கியவருக்கு மருந்து கல்வி கிடைத்தது சமூகநீதி சமவாய்ப்பு 12 வருட பள்ளிக்கல்வியை மதிக்கும் சேர்க்கையால் மருத்துவத்தில் முன்னேற்றம் இருந்தது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

 

 

நீட் தேர்வு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இயலும் நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகளால் மாணவர்கள் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை நீட் தேர்வு இழந்துள்ளது நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon