--- --:--:-- --

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அழிப்பு: காணொலி வாயிலாகப் பார்வையிட்ட விஜய்

8

மிழ்நாடு முழுவதும் காவல் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை, முதலமைச்சர் விஜய் முன்னிலையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. செங்கல்பட்டு, நெல்லை, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் போதைப்பொருட்களை உலைகளில் இட்டு அழிக்கும் பணிகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் நேரில் பார்வையிட்டார்.

 

 

‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடையும் நோக்கில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் தமிழக அரசு, அதன் ஒருபகுதியாகப் பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களைப் பாதுகாப்பான முறையில் அழிக்கும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon