திருமாவை முதல்வராக்கும் திட்டத்தை முன்வைத்தேன் – இ.பி.எஸ் மறுத்தார் : சி.வி. சண்முகம்
அ.தி.மு.க-வின் தொடர் தேர்தல் தோல்விகளுக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் பொறுப்பாளர்களும்தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சாடியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க 47 தொகுதிகளில் பெற்ற வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றால், மீதமுள்ள 187 தொகுதிகளில் அடைந்த தோல்விக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் ஒரு தேர்தலில் கூட அ.தி.மு.க வெற்றி பெறவில்லை சுட்டிக்காட்டினார். மேலும், காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பேற்று ராஜினாமா செய்தது போலத் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், தொல். திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்ற தனது யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய விசிகவை ஆதரவாகப் பெறலாமே என்று கேட்டதோடு, தென் மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களிலும் அ.தி.மு.க முற்றிலும் பூஜ்ஜிய நிலையை அடைந்துள்ளதாகவும், பாமக கூட்டணியில் இருந்ததாலேயே வட மாவட்டங்களில் 34 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்ற முடிந்தது என்றும் சி.வி. சண்முகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




