--- --:--:-- --

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு..!

1

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அந்த தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த 19ஆம் தேதி நடந்த கணித தேர்வில் கேள்வி எண் 17, கேள்வி எண் 25 மற்றும் கேள்வி எண் 47 ஆகியவை தவறாக கேட்கப்பட்டதாக கணித ஆசிரியர்கள் தேர்வு துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

 

அதில் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை அளிக்க முயன்ற மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட கேள்விகளுக்கான மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon