தீபாவளியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 30-ம் தேதி அரை நாள் விடுமுறை..!
தமிழ்நாட்டில் அக்.31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு கல்வி நிறுவனங்கள் நாளை செயல்படுமா என்று மாணவர்கள் மத்தியில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் தான், தமிழ்நாட்டில் நாளை அதவாது அக்.30ம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்பாடு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தீபாவளி பண்டிகை அக்.31ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாளை அக்.30ம் தேதி அரை நாள் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை முற்பகல் வரை பள்ளிகள் கல்லூரிகள் செயல்படும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அக்.31ம் தேதி, நவ.1ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளான நாளையும் அக்.30ம் தேதியும் அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





