--- --:--:-- --

தலைகீழாக குறைந்த தங்கம் விலை..!

2

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த மார்ச் மாதம் போர் காரணமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்டு பிறகு ஏற்ற இறக்கமாக இருந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வந்தது.

 

அந்த வகையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.13,820க்கும் சவரனுக்கு ரூ.1440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,530க்கும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.92,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon