--- --:--:-- --

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

4

2025-ஆம் ஆண்டு தங்கத்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இருந்த தங்கம் விலை கடந்த ஆண்டில் உச்சக்கட்டமாக உயர்ந்து பலரையும் வாயை பிளக்க செய்தது. 2025 ஆம் ஆண்டு தங்கம் விலை உச்சம் தொட்டு வந்த நிலையில் 2026 புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.

 

தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து மீண்டும் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதன் படி கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.10,445க்கும் சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.83,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.256க்கும், ஒரு கிலோ ரூ.2,56,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon