--- --:--:-- --

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5 வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

2

திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஒட்டன்சத்திரம் மற்றும் கும்பகோணம் ஆகிய தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

 

இந்த 5 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை ஜி.கே.வாசன் சந்தித்தார். அப்போது 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் அறிவித்தார்.

 

ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர்
ஈரோடு மேற்கு – யுவராஜா
கிள்ளியூர் – நிவின் சைமன்
ராணிப்பேட்டை – கார்த்திகேயன்
கும்பகோணம் – எம்.ஆர்.அசோக்குமார்

 

இதை தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பும் கட்சியாக பாஜக உள்ளது. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அடுத்தமுறை விரும்பும் சின்னத்தில் போட்டியிடுவதே இலக்கு.

 

பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மீண்டும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத காரணத்தால் கூட்டணி கட்சியான பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon