ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் தருவதாக கூறி மோசடி..!
சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் 70 கோடிக்கு மேல் பணம் மோசடி செய்துள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் ஓராண்டுக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் தருவதாக கூறி இருக்கின்றனர்.
இதை நம்பி 450-க்கும் மேற்பட்டோர் பல லட்சம் ரூபாயை முதலீடு செய்வதாக தெரிகிறது. முதல் இரண்டு மாதங்களுக்கு சென்றபடி பணத்தை வழங்கிய அந்த நிறுவனம் பின்னர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. 400 மேற்பட்டதா நபர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.





