--- --:--:-- --

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருவாய் என ஆசை காட்டி மோசடி..!

5

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய ஆசைகாட்டி பட்டதாரி பெண்ணிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மணமேல்குடி யை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண்ணிடம் அலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வீட்டில் இருந்தே அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறியுள்ளனர். இதற்காக பல தவணைகளாக 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளனர்.

 

இதுபற்றி புதுக்கோட்டை சைபர் கிரைமில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கொண்டு விசாரித்து வந்த காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

 

இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய நபரான சோமசுந்தரம் துபாயில் இருப்பதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறினர்.

 

Right Menu Icon