--- --:--:-- --

தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் நான்கு பேர் பலி..!

6

டலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

 

சென்னையில் வசித்து வந்த அஜித் தனது மனைவி மதுமிதா, மனைவியின் தாயார் தமிழ்ச்செல்வி மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் திண்டுக்கல் சென்று கொண்டிருந்தார்.

 

வேப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி பறந்து சென்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. காரில் இருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர். அஜித் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து நேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Right Menu Icon