வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விடுவிப்பு..!
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி ஓராண்டுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
மெஹபூபா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு தொடர்பான வழக்கு இன்னும் இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ள நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முப்தி மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தாண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து அவரது இல்லம் துணை சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டு அவர் அங்கு ஏப்ரல் 7 ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டார். தற்போது ஓராண்டுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.






