--- --:--:-- --

கட்டாய திருமணம் மணமகன் எடுத்த விபரீத முடிவு..!

3

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கட்டாய திருமணம் செய்து வைத்ததாக ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தி கடிதம் எழுதி வைத்துவிட்டு மணமகள் தற்கொலை செய்து கொண்டார்.

 

காந்திநகர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனும் அதே பகுதியை சேர்ந்த தேவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் ராதாகிருஷ்ணன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை அழைத்து காவல் நிலைய வாசலில் உள்ள கோயிலில் கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்தவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மரணத்திற்கு பெண்ணின் உறவினர்கள் ஐந்து பேர் தான் காரணம் என்று கடிதம் எழுதி whatsapp குரூப்பில் பகிர்ந்திருக்கிறார். அதனைய டுத்து அவரது உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon