--- --:--:-- --

தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ. 5,000 பரிசு என தமிழக அரசு அறிவிப்பு!

11

தூய தமிழில் பேசுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் நடைமுறை வாழ்க்கையில் கலப்புச் சொற்கள் தவிர்த்து தூய தமிழில் பேசுவோரிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மூன்று பேருக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

தகுதியுடையோர், சொற்குவை டாட் காம் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நாடறிந்த தமிழ்ப் பற்றாளர்கள் இருவரிடம் தனது தமிழ்ப் பற்றை உறுதி செய்து சான்றிதழ் பெற்று சுய விவரக் குறிப்புகள் உடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon