--- --:--:-- --

மகனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

12

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நாள்தோறும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேல்நிலைப்பட்டியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரின் இளைய மகன் அருண்குமார் அப்போது ஓட்டுநர் வேலைக்கு செல்வதும் பின்னர் குடித்துவிட்டு வந்து தந்தையுடன் தகராறு ஈடுபடுவதும் ஆக இருந்துள்ளான்.

 

இதனால் கோபித்துக்கொண்டு பாலச்சந்திரனின் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட தந்தை மகன் இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை பாலச்சந்திரன் கட்டையால் அடித்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

மகனை கொன்று அதிர்ச்சியிலும் குற்ற உணர்ச்சியுடன் பாலச்சந்திரன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon