மகளிருக்கு ரூ. 1,000 – அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாதம் ஒரு கோடி பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டுக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, மூன்று கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.





