--- --:--:-- --

முதன் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண் நியூசிலாந்தில் அமைச்சராகிறார்..!

1

நியூசிலாந்து வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்ற 41 வயதான பெண் நியூசிலாந்தின் சமூக நலம், இளைஞர் நலம் மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தொழில்துறையினர் இணை அமைச்சர் பொறுப்பும் இவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பிரியங்கா கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் பிறந்தவர்.

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ராமன் ராதாகிருஷ்ணன் மற்றும் உஷா தம்பதியினருக்கு 1979ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் பிரியங்கா. சிங்கப்பூரில் வளர்ந்த இவர் பின்னர் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தார்.

Leave a Reply

Right Menu Icon