புதுக்கோட்டையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு முதல் நபர் பலி..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெல்லம்குடியை சேர்ந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரொனா பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.
கடந்த வாரம் இவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு முதல் நபர் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






