--- --:--:-- --

பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற பெண்..!

10

வேலூர் அணைக்கட்டில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஒடுக்கத்துர் அஞ்சல் அலுவலக வீதியில் கட்டட வேலை நடைபெற்று வருகிறது.

 

அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கையில் குழந்தையுடன் அமர்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் யாரும் பார்க்காத நேரத்தில் குழந்தையை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு தொழிலாளர்கள் குழந்தையை மீட்டனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்ற பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon