--- --:--:-- --

மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

12

த்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொரொனா கண்டறியப்பட்டது. கொரொனா சிகிச்சைக்குப் பின் கொரொனாவிலிருந்து மீண்ட அவர் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

 

இந்த நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரொனாவுக்கு பிந்தைய பாதிப்பு அவருக்கு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon