--- --:--:-- --

சானிடைசர் தேய்த்த கையால் சிகரெட் பற்ற வைத்ததால் உடலில் பற்றிய தீ..!

11

கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின் சிகரெட் பற்ற வைத்த நபர் மீது தீப்பற்றி எரிந்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கொரொனா தொற்று மீண்டும் வேகமெடுக்க கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் எனவும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் சார்பிலும் அரசு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

 

கொரொனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள வீடு, அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் சானிடைசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரொனா பரவலை தடுக்க சானிடைரை பயன்படுத்தினாலும் அதனை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லாமல் உள்ளது.

 

ஏனெனில் சானிடைசரை பயன்படுத்திவிட்டு அலட்சியம் காரணமாக சிகரெட் பற்ற வைத்த முதியவர் மீது தீப்பற்றிய சம்பவம் சென்னையில் அரங்கேறியது.

Leave a Reply

Right Menu Icon