--- --:--:-- --

தேநீர் கடைக்கு சீல் வைத்ததால் பகுதி நேர ஊழியர்கள் சாலை மறியல்.!

10

கோவையில் தேநீர் கடைக்கு சீல் வைத்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதில் நேற்று முன்தினம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டுவரும் தேனீர் கடையில் அதிகளவு வாடிக்கையாளர்கள் இருந்ததாகக் கூறி 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே மீண்டும் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் அதிகளவு கூட்டம் இருந்ததை காரணம் காட்டி கடைக்கு சீல் வைத்தனர்.

 

இதனால் அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினரும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon