பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதி ரத்து..!
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் சதுப்பு நிலம் உள்ளது. அந்தப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று 1250 வீடுகள் கட்டுவதற்கு கடந்த திமுக அரசு அனுமதி அளித்தது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த கட்டுமான திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு ஈரநில ஆணையம் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் ராம் சார் சதுப்பு நில உள்ளது. ராம் சார் தளம் என்றால் நிலத்தின் ஈரத் தன்மையை பாதுகாப்பதாகும்.
ஈரநில பாதுகாப்பை மீறியதாக கருதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் அனுமதியை ரத்து செய்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில், தனியாருக்கு கொடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தை த.வெ.க. அரசு தற்போது தடை உத்தரவு பிறப்பித்து நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




