--- --:--:-- --

மறுமணம் செய்யும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி..!

12

றுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி கொடுக்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநில அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 

அந்த வகையில் மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி கொடுக்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

 

இது குறித்து பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்கள் மறுமணம் செய்து கண்ணியத்துடன் வாழவும் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon