--- --:--:-- --

செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர்..!

2

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே ஆயுதப்படை பெண் காவலர் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சத்தியலட்சுமி பீர்க்கன்காரணை காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். காலையில் பணிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் அதில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

 

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த பீர்க்கங்கரணை போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon