82 வயது மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் வீடியோ..!
ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் வீட்டு வேலை செய்யாத காரணத்தினால் 82 வயது மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. முதுமை காரணமாக அந்த மூதாட்டி யார் வீட்டு வேலை எதுவும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மருமகள் மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மருமகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






